ரோஹித் சர்மா, ரஹானேவுக்கு இடம் இல்லை ; தரமான அணியை தேர்வு செய்துள்ளார் புஜாரா !!

ரோஹித் சர்மா, ரஹானேவுக்கு இடம் இல்லை ; தரமான அணியை தேர்வு செய்துள்ளார் புஜாரா

கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.

வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான சட்டீஸ்வர் புஜாரா சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த உலக 11ஐ தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

புஜாரா தேர்வு செய்த உலக ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னையும் தேர்வு செய்துள்ள புஜாரா அடுத்ததாக விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரவிசந்திர அஸ்வினும், ஜடேஜாவும் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக வாட்லிங் இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ், பேட் கம்மின்ஸ், காகிசோ ரபாடா மற்றும் முகமது ஷமி போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

புஜாரா தேர்வு செய்துள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான உலக ஆடும் லெவன்;

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், வாட்லிங் (விக்கெட் கீப்பர்), ரவீச்சந்திர அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், பேட் கம்மின்ஸ், காகிசோ ரபாடா, ரவீந்திர ஜடேஜா (12வது வீரர்), முகமது ஷமி (13வது வீரர்).

Mohamed:

This website uses cookies.