‘யுனிவர்ஸ் பாஸ்’ க்கு இப்படி ஒரு நிலைமையா? – கிறிஸ் கெயில் வருத்தத்துடன் பேட்டி!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மான்சி தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் வெளியேறினார். இதுதொடர்பாக மிகவும் வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக்கில் பங்கேற்று நடப்பு சாம்பியன் ஜோசி ஸ்டார்ஸ் அணிக்காக ஆடினார் கிறிஸ் கெயில். துரதிஷ்டவசமாக, அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

நேற்று நடைபெற்ற 6-வது போட்டியில் கிறிஸ் கெய்ல் அரைசதம் அடித்தார். இருப்பினும், அந்த அணி தோல்வியையே தழுவியது. இதனால் தொடரில் இருந்து சோகத்துடன் வெளியேறினார் கிறிஸ் கெய்ல்.

மேலும், இந்த தொடரில் இவருக்கு நேர்ந்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுயதாவது:

“நான் இந்த அணியைப் பற்றி மட்டும் பேசவில்லை. கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் எல்லா அணிகளுடனும் இந்த விஷயத்தை பற்றி ஒப்பிட்டு பார்த்தேன். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை என்றாலும் நான் மிகவும் சுமையாகிவிடுகிறேன்.

நான் எந்த அணியையும் குறிப்பிட்டு பேசவில்லை. நான் பொதுவாக பேசுகிறேன். ஒரு வீரர், நிர்வாகம், தலைமை நிர்வாகம், போர்டு உறுப்பினர் என பேசுகிறேன். ஒருமுறை விளையாட வில்லை என்றால், என்னுடைய கேரியர் முடிந்து விடுகிறது. அவர் நன்றாக விளையாடவில்லை. மோசமான வீரர் என்று பேசத் தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களை நான் எப்போதுமே ஒதுக்கிவிடுவேன்.
நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், சராசரியாக உங்கள் அணிக்காக ஆடவரும் அனைத்து வீரர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதையை கொடுங்கள்’’ என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.