இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; இந்திய அணிக்கு எதிரான கரீபியன் படை அறிவிப்பு !!

இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; இந்திய அணிக்கு எதிரான கரீபியன் படை அறிவிப்பு

இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான மூன்றுவிதமான இந்திய அணியும் கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் அணியில் மூத்த வீரர் கிறிஸ் கெய்லுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அறிவித்திருந்த கெய்ல், உலக கோப்பைக்கு பின்னர், நான் தொடர்ந்து ஆடுவேன் என்று அந்தர்பல்டி அடித்தார். இந்நிலையில், அவருக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் அணியில் இடம் கிடைத்துள்ளது.

கெய்ல் தனது ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் 10393 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 13 ரன்கள் அடித்தால் லாராவை பின்னுக்குத்தள்ளி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுவிடுவார்.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், ஹெட்மயர், பூரான், சேஸ், பிராத்வெயிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜான் காம்ப்பெல், எவின் லெவிஸ், கெய்ல், ஷாய் ஹோப் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நால்வர் உள்ளனர். இவர்களில் யாருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம். டேரன் பிராவோவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கிறிஸ் கெய்ல், ஜான் காம்ப்பெல், லெவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், பூரான், ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலென், பிராத்வெயிட், கீமோ பால், கோட்ரெல், ஒஷேன் தாமஸ், கீமார் ரோச்.

Mohamed:

This website uses cookies.