பஞ்சாபி டர்பன் கட்டிய அசத்திய கிறிஸ் கெய்ல்
தற்பொழுது ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டுக்கு சென்று விட்டனர்.
பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் தற்போது மாலத்தீவில் உள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தை வெகுவாக கவர்ந்தது.
பஞ்சாபி டாடி லுக்கில் கிறிஸ் கெயில்
மாலத்தீவில் நாட்களை செலவழித்த கிறிஸ் கெய்ல், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் பஞ்சாபி டர்பன் கட்டிக்கொண்டு இருப்பது போல் அவர் தோற்றம் அளித்து இருந்தார்.
அந்த புதிய கெட்டப் ஒரு விளம்பரம் படத்திற்கு என்று தெரியவந்தது. மேலும் தற்பொழுது மாலத்தீவில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு விட்டார். அவர் தற்பொழுது தனது சொந்த ஊருக்குச் சென்று தனது குடும்பத்தினருடன் நாட்களை கழிக்க உள்ளார்.
மேலும் வருகிற ஜூலை மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க இருக்கின்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் விளையாட இருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டி20 தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது பழைய பார்மை காண்பிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் ஜூலை 10ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 17ம் தேதி வரை நடக்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியை கீரன் பொள்ளர்ட் தலைமை தாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.