வீடியோ: பந்தை பிடிக்க முயன்று.. மீண்டும் காலால் பவுண்டரிக்கு உதைத்து தள்ளி காமெடி பண்ணிய கிறிஸ் கெயில்!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கிறிஸ் கெயில் பவுண்டரிக்கு சென்ற பந்தை பிடிக்க முயற்சிக்கும்போது மீண்டும் உதைத்து பவுண்டரிக்குள் தள்ளி காமெடி செய்த கிறிஸ் கெயில்.

இந்தப் போட்டியில் டாஸ் இழந்து பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப். பஞ்சாப் பந்திவீச்சை அடித்து துவம்சம் செய்தது ஹைதராபாத் அணி. அந்த அணி 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் அடித்திருந்தது.

18வது ஓவரை முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்தை கேன் வில்லியம்சன் பவுண்டரி நோக்கி அடிக்க, பந்தை பிடிக்க கிறிஸ் கெயில் மிக வேகமாக ஓடி முயற்சி செய்தார். ததச் பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் கிட்டத்தட்ட பந்தை பிடித்து விட்டார் என எதிரபார்த்த நிலையில் காலால் பந்தை தடுக்க முயன்றார் கெயில்.

ஆனால், கெயில் ஓடி வந்த வேகத்தில் குனிய முடியாமல் பந்தை தடுப்பதற்கு பவுண்டரிக்குள் உடைத்து தள்ளினார். இதனால், பந்து வேகமாக பவுண்டரியை கடந்து ஃபோர் ஆனது. முஜீப் 3 ஓவர்களில் ஏற்கனவே 40 ரன்களுக்கு மேல் கொடுத்துவிட்டு சோகமாக இருக்கும் நிலையில், கெயில் இப்படி காமெடி பண்ணி கொண்டு இருந்தது மிகவும் ஏமாற்றமாக போனது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 212 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கை வைத்தது. வார்னர் 81 ரன்கள் அடித்து அசத்தினார்.

பஞ்சாப் அணிக்கு கே எல் ராகுல் மட்டுமே 79 ரன்கள் அடித்து ஆறுதல் தந்தார். மீதமுள்ள வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் பஞ்சாப் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலேயே நீடிக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.