கிறிஸ் லின்னிற்கு அறுவை சிகிச்சை தேவை இல்லையாம்; மகிழ்ச்சியில் கொல்கத்தா ரசிகர்கள்
நியூசிலாந்து அணியுடனான டி.20 போட்டியின் போது தோள்பட்டையில் காயமடைந்த கிறிஸ் லின்னிற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டி ஆக்லாந்த் மைதானத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டி ஆக்லாந்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியின் பீல்டிங்கின் போது, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் லின்னிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டியின் பாதியிலேயே லின் வெளியேறினார். முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் கிறிஸ் லின், வலது பக்க தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது.
தோள்பட்டையில் அடி பலமாக பட்டுள்ளதால் கிறிஸ் லின், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும், ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. இதனால் கொல்கத்தா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கிறிஸ் லின் தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக விரைவில் இந்த கிறிஸ் லின் காயத்தில் இருந்து விடுபட்டு பூரண நலத்துடன் கிரிக்கெட் விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் காயத்தில் இருந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொட்ரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. மேலும், கேகேஆர் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் 9.5 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்காது. கொல்கத்தா அணியில் சேர்ந்த பிறகு, ஒரு போட்டியில் கூட விளையாடாமல் விலகினால் பாதி பணம் கிடைக்கும். ஐபிஎல் போட்டியில் விளையாடினால் முழுத் தொகையையும் பெறுவார்.