ஹாங் காங் டி20 பிளிட்ஸ் தொடரில் கிறிஸ் லின் விளையாடுகிறார்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின் ஹாங் காங் டி20 பிளிட்ஸ்-இல் விளையாட உள்ளார். அந்த டி20 தொடரில் ஹுங் ஹோம் ஜேடி ஜாகுவார்ஸ் அணியுடன் 2018ஆம் ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் கிறிஸ் லின். இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

சமீபத்தில் பிக் பாஷ் லீக் தொடரில் அடுத்த ஐந்து வருடத்திற்கு பிரிஸ்பேன் ஹீட் அணியுடன் மில்லியன்-டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின். “அடுத்த பிப்ரவரி மாதம் ஹாங் காங் வருவதற்காக காத்திருக்கிறேன். அந்த நாட்டில் கிரிக்கெட் வளர்ந்து கொண்டு வருவதாக கேள்வி பட்டேன். இதனால் புதிய அனுபவத்தை பெற காத்திருக்கிறேன். புது சவாலை எதிர்கொள்வது எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். அடுத்த தொடரில் ஜாகுவார் அணிக்கு கோப்பை வென்று கொடுக்க உதவி செய்வேன். அங்கு அடித்த ரன்கள் எல்லாமே நல்ல ஸ்கோராக தான் இருக்கிறது. அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொழுது போக்காக இருக்கிறது என்று தெரிகிறது,” என கிறிஸ் லின் கூறினார்.

கடந்த வருடம் ஹாங் காங் டி20 பிளிட்ஸ் தொடரில் ஜாகுவார் அணி மூன்றாவது இடத்தில் முடித்தது. டேரன் சம்மி, முகமது நவீத், ஜோகன் போத்தா, ஜோனதன் பூ ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக அந்த அணிக்கு விளையாடினார்கள். அடுத்த ஆண்டிற்கான ஏலத்தில் கிறிஸ் லின் தான் முதல் வெளிநாட்டு வீரராக வாங்கினார்கள்.

ஜாகுவார் அணியின் உரிமையாளர் சூசன் லுல்லா,”சர்வதேச கிரிக்கெட்டோ அல்லது உள்ளூர் டி20 போட்டிகளோ, எதுவாக இருந்தாலும், கிறிஸ் லின் கண்டிப்பாக இருப்பார்,” என கூறினார்.

“அவர் எங்கள் அணிக்காக விளையாட போவது குறித்து சந்தோசமா இருக்கிறது. அவர் தற்போது காயங்களில் இருந்து மீண்டு வருகிறார். அவரை வாங்குவதற்கு ஒரே நிமிடம் கூட நாங்கள் வீணாக்கவில்லை. ஹாங் காங் கிரிக்கெட் அணியில் இருந்து சில நல்ல பந்துவீச்சாளர்களை வாங்கிய பிறகு, எங்கள் அணியின் பேட்டிங் பலத்தை வலுப்படுத்த சில அதிரடி வீரர்களை வைத்துள்ளோம்,” என அவர் மேலும் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.