வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு பெண் ஒருவர் அம்பயராக நிற்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலியா லெவன், நியூசவுத் வேல்ஸ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டிக்கு பெண் ஒருவர் அம்பயராக நிறுத்தப்படவுள்ளார்.
2016ம் ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட 31 நடுவர்கள் லிஸ்டில், போலோசக் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை போட்டிக்கான நடுவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். போலோசக், இதுவரை ஒரே ஒரு பெண்கள் டி20 போட்டியில் மட்டுமே நடுவராக செயல்பட்டிருக்கிறார்.
தற்போது முதல்முறையாக, ஆண்கள் விளையாடும் போட்டியில் நடுவராக களம் இறங்குகிறார். இதுவரை ஒரு கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத போலோசக், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடுவர் குழு மன்றத்தில் ஒரு உறுப்பினராக இரண்டு வருடங்கள் இருந்துள்ளார். ஆண்கள் அணி பங்கேற்ற ஒரு உள்ளூர் போட்டியில், 3-வது நடுவராகவும் போலோசக் செயல்பட்டுள்ளார்.
கிளாரி போலோசாக், 29 வயதான பெண் அம்பயரான் இவர், சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிக்கு அம்பயராக இருந்தவர். இவர் தற்போது ஆஸ்திரேலியா லெவன், நியூசவுத் வேல்ஸ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டிக்கு அம்பயாகவுள்ளார். ஆனால் கிளாரி இதுவரை ஒரு கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடியதில்லை என்பதே அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
இதுகுறித்து கிளாரி கூறுகையில்,’ இதுவரை நான் கிரிக்கெட் விளையாடியதே இல்லை. ஆனால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பேன். என் ஆர்வத்தை பார்த்த எனது தந்தை என்னை அம்பயர் கேர்ஸ்படிக்க வைத்தார். ஆனால் அங்கு வைத்த பரீட்ச்சையில் நான் பலமுறை பெயிலாகியுள்ளேன். ஆனால் என் விடா முயற்சி காரணமாகவே எனக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.’ என்றார்.