கோஹ்லி இல்லாமல் இந்திய அணியால் வெல்ல முடியுமா..?முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

விராட் கோலி இல்லாமல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா இந்தியா வென்று விட்டால் இந்திய அணிக்கு அது ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்திய அணியில் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் விராட் கோலி பங்கெடுக்க மாட்டார். அவரின் மனைவி பிரசவத்திற்காக இந்திய திரும்ப இருக்கும் விராட் கோலி அடுத்த போட்டிகளில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் செப்பல் கூறியதாவது விராட் கோலி இல்லாதது இந்திய அணியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருந்தபோதும் இது இளம் வீரர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளதாவது, விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.விராட் கோலி இடத்தை எந்த பேட்ஸ்மேன் நிரப்பபோகிறார் என்று பார்க்க ஆர்வமாக உள்ளது என்று அவர் கூறினார். கோலி இல்லாதது இந்திய அணியின் கேப்டன்ஷிப்பிலும் பெரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

கே எல் ராகுல் ஒரு சிறந்த வீரர், நல்ல பேட்ஸ்மேன் இவருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது அவரால் நிச்சயம் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படமுடியும். இருந்தாலும் இவரால் கூட விராட் கோலி இடத்தை நிரப்ப முடியாது என்று அவர் கூறினார்.

மேலும் ரஹானேவின் கேப்டன்ஷிப் பற்றி அவர் கூறியதாவது ரஹானே ஒரு மிகச்சிறந்த வீரர் அவருடைய பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறினார் அவருடைய கேப்டன்ஷிப்பில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

Mohamed:

This website uses cookies.