பி.சி.சி.ஐ., அதிகாரத்தில் அதிரடி மாற்றம் !!

பி.சி.சி.ஐ., அதிகாரத்தில் அதிரடி மாற்றம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் கமிட்டியின் கட்டுப்பாட்டுக்கு மாறியுள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க வினோத் ராய் தலைமையில் நிர்வாக கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது. வினோத் ராய் தலைமையிலான இந்தக் கமிட்டி கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அதன்படி தேர்வு குழு மற்றும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியை தவிர்த்து மற்றவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா (பொறுப்பு), செயலாளர் அமிதாப் சவுத்ரி (பொறுப்பு), பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோர் நிர்வாக கமிட்டியின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

அதே போல் அவர்களின் அதிகாரபூர்வமான பயணங்களுக்கு கமிட்டியின் அனுமதியை பெற வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை கிரிக்கெட் வாரியத்தின் பணிகளை தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தலைமையிலான குழு கவனிக்கும் என்று நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளது.

The CoA, meanwhile, has taken charge of the BCCI completely. The Vinod Rai-panel has annulled all the sub-committees of the Indian board except two. The two still-existing committees are the CAC and the selection panel.

கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க வினோத் ராய் தலைமையில் நிர்வாக கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது. வினோத் ராய் தலைமையிலான இந்தக் கமிட்டி கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

Mohamed:

This website uses cookies.