கோச்சிங் செய்வது எனக்கு பிடிக்கும் என கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தனது கடைசி கிரிக்கெட் போட்டியை ரஞ்சி கோப்பை தொடரில் ஆடினார். இதுவும் மற்றுமொரு கிரிக்கெட்டரின் ஓய்வுதானே என்று சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது தனது வாழ்நாள் கனவு நனவானதாக சச்சின் கண்ணீர் மல்க கூறினார், முன்னனி வீரர்கள் பலரும் சச்சினுக்காகவே உலகப்கோப்பையை வென்றதாக பெருமிதத்துடன் கூறியபோது “எந்த ஒரு தனி மனிதனை விடவும் தாய்நாடே பெரிது, நாட்டுக்காகவே பெருமைபடுவதாகக் கூறினார் காம்பிர்.
2012-ல் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது கூறப்பட்ட காரணம் இவர் இரண்டு ஆண்டுகளாக சதமடிக்கவில்லை என்பதே, ஆனால் அப்போதைய நிலையில் அவர் சதமடித்திருந்தாலும் அணிக்காக ஆடாமல் சதத்திற்காக ஆடுகிறார் என்று காரணம் கூறி நீக்கியிருப்பார்கள். ஆட்டத்தின்போது ஆக்ரோஷமாக இருக்கும் காம்பிர் தான் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சைகளுக்கு தன் மீது யாரும் பரிதாபப்பட வேண்டாம், எனது திறமையை நிரூபித்து மீண்டும் இடம்பிடிப்பேன் என்று முடித்துக் கொண்டார்.
5 போட்டிகளைக் கொண்ட தொடராக இருந்தால் அது ஜிம்பாப்வே அணியாக இருந்தாலும் ஒரு போட்டியிலாவது தோற்றுத்தான் தொடரை வெல்வோம் என்றிருந்த காலத்தில் கேப்டனாக 2010-ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்று முழுமையாக கைப்பற்றிக் காட்டினார்.
வழக்கமாக இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தைகளால் வம்பிழுக்கும்போது தலையைக் குனிந்து கொள்ளும் பழக்கம் இவரிடம் இருந்ததில்லை, அதே நேரம் ஆக்ரோஷமாக பேட்டை சுழற்றி விக்கெட்டை இழப்பதும் கிடையாது. ஆக்ரோஷத்தை உத்வேகமாக்கி அணியை வெற்றி பெற வைப்பதில் விராட் கோலிக்கு அண்ணன் இவர்.
ஐபிஎல் போட்டியின்போது விராட் கோலியுடனும் கடும் வாய்த் தகராறு, மீண்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் கிடைத்தபோது இவர் கூறியது வரும் ஐபிஎல் போட்டியிலும் அதேபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது அணியின் கேப்டனாக அதே ஆக்ரோஷத்துடன்தான் கோலியை சந்திப்பேன் என்றார். இதே காம்பிர்தான் 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 150* ரன்கள் அடித்ததற்காக தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை அப்போட்டியில் முதல் சதம் அடித்திருந்த இளம் வீரரான விராட் கோலியை அழைத்து பகிர்ந்து கொண்டார். சக மாநில வீரர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தரும் இப்பண்பு டெல்லி வீரர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.
மனதில் பட்ட நியாயமான எண்ணங்களை துணிவுடன் வெளிப்படுத்துவதில் கங்குலியை போன்றவர். 2012-ல் நடந்த முத்தரப்பு தொடரில் அடிலெய்டில் நடந்தது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம். இப்போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டபோது அந்த ஓவரில் தோனி 112 மீட்டர் சிக்ஸருடன் அணியை வெற்றி பெற வைத்த பினிஷிங் திறமையை அனைவரும் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
பவுண்டரியும் அடிக்கவில்லை. கடைசி ஓவரில் டோனிக்கு பிடிக்கப்பட்ட கேட்ச் நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். கேப்டனாகவே இருந்தாலும் அவசியமில்லாமல் கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்து வந்த தவறை சுட்டிக் காட்டினார்.