பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பங்கேற்காத கொலின் முன்ரோ முத்தரப்பு டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்தது.
2-வது போட்டியின்போது நியூசிலாந்து தொடக்க வீரர் கொலின் முன்ரோவிற்கு காயம் ஏற்பட்டது. ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் அவதிப்பட்ட கொலின் முன்ரோ நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் பங்கேற்கவில்லை.
பிப்ரவரி 3-ந்தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் கொலின் முன்ரோ இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இந்நிலையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொலின் முன்ரோ இடம்பிடித்துள்ளார்.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-
1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாம் ப்ளென்டெல், 3. ட்ரென்ட் போல்ட், 4. டாம் ப்ரூஸ், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. மார்ட்டின் கப்தில், 7. அனாரு கிட்சென், 8. கொலின் முன்ரோ, 9. சோத் ரான்ஸ், 10. மிட்செல் சான்ட்னெர், 11. இஷ் சோதி, 12. டிம் சவுத்தி, 13. ராஸ் டெய்லர், 14. பென் வீலர்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர் க்ளென் பிலிப்ஸ் நீக்கப்பட்டு டாம் ப்ளென்டெல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் நீக்கப்பட்டுள்ளார்.