இவர் தான் ஒப்பனிங் இறங்க தகுதியானவர் : பயிற்சியாளர் மைக் ஹெசன்

நியூசிலாந்து அணி இந்த அக்டோபர் மாதத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடவுள்ளது. அதற்கான நியூசிலாந்தின் முக்கிய 9 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

தற்போது நியூசிலாந்து அணியின் பயிர்சியாளர் மைக் ஹெசன் தொடர் துவங்கும் முன்பே தொடருக்கான வாதங்களை முன் வைக்கத் துவங்கி விட்டார்.

அவர் அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரராக தற்போது காலின் முன்ரோ தான் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து அணி இந்தியா வந்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதி மும்பையிலும், 2-வது போட்டி 25-ந்தேதி புனேயிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 29-ந்தேதியும் நடக்கிறது.

இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியில் 15 வீரர்கள் இடம்பெறுவார்கள். ஆனால் நியூசிலாந்து 9 பேர் கொண்ட அணியைத்தான் அறிவித்துள்ளது. நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. அதில் இடம்பிடித்துள்ள வீரர்களில் 6 பேரை பின்னர் தேர்வு செய்கிறது.

தற்போது அறிவித்துள்ள 9 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. ட்ரென்ட் போல்ட், 3. கொலின் டி கிராண்ட்ஹோம், 4. மார்ட்டின் கப்தில், 5. டாம் லாதம், 6. ஆடம் மில்னே, 7. மிட்செல் சான்ட்னெர், 8. டிம் சவுத்தி, 9. ராஸ் டெய்லர்.

வேகப்பந்து வீச்சாளர் நீசம் மற்றும் ப்ரூம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Editor:

This website uses cookies.