கோஹ்லி கூட சேத்து வச்சு பேசாதீங்க ப்ளீஸ்.. அவரெல்லாம் ஒரு ஆளே இல்லை என்கிற பாணியில் பேசிய பாக்., கேப்டன்!

கோஹ்லி கூட சேத்து வச்சு பேசாதீங்க ப்ளீஸ்.. அவரெல்லாம் ஒரு ஆளே இல்லை என்கிற பாணியில் பேசிய பாக்., கேப்டன்!

கோஹ்லியையும் என்னையும் ஒப்பிட்டு பேசாதீங்க, என சமீபத்திய பேட்டியில் பேசி இந்திய ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார் பாக்., அணியின் கேப்டன் பாபர் அசாம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு முதன்முதலாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய இளம் வீரர் பாபர் அசாம், படிப்படியாக தனது பேட்டிங்கின் அசாத்திய திறமையால் தற்போது லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக உருவெடுத்துள்ளார்.

அசாம் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் அசத்தி வரும் பாபர் அசாமை, உலகின் தலைசிறந்த ஒரு வீரர்களில் ஒருவராக இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் கடந்த சில காலங்களாக ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

இந்த ஒப்பீடு குறித்து முன்னமே பாபர் அசாம் பெருமைப்படுவதாக கூறினார். அதேபோல், இன்னும் நாம் வளர வேண்டி இருக்கிறது. அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அப்படியே மாற்றி கூறியிருப்பது இந்திய ரசிகர்களை கடுப்பேற்றிய உள்ளது. அவர் கூறுகையில், “என்னை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தான் அணியின் லெஜெண்டுகளான ஜாவத் மியாண்டட், முகமது யூசுப் மற்றும் யூனிஸ் கான் போன்றவர்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்புகிறேன். அது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையும் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

வளர்ந்து வரும் இளம் வீரரான பாபர் அசாமின் இந்த பேச்சு, “விராட் கோலி ஒரு ஆளே இல்லை” என்கிற பாணியில் இருப்பதாக இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், பாக்., வீரர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை அவ்வப்போது இவ்வாறு வார்த்தைகளால் சாடுவதை நாம் காண முடிகிறது.

இங்கிலாந்து சென்ற பாக்., வீரர்கள்:

ஊரடங்கிற்கு பிறகு பாக்., வீரர்கள் இங்கிலாந்து சென்று 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றன. இதற்க்கான பாக்., அணி கடந்த ஜூன் 28ஆம் தேதி கொரோனா பரிசோதனை முடிந்து இங்கிலாந்து சென்றது.

Prabhu Soundar:

This website uses cookies.