ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் திடீர் மரணம்
ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான கான் டி லாங்கே நேற்று இயற்கை எய்தியுள்ளார்.
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் துவங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறவிட்டாலும், அடுத்தடுத்த தொடர்களிலாவது இடம்பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறாததால் ஏற்கனவே ஸ்காட்லாந்து கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூடுதல் சோகத்தை அளிக்கும் விதமாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான கான் டி லங்கே நேற்று (17/4/19) மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
38வயதான கான் டி லங்கே 2015ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி.20 தொடர் மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு அறிமுகமானவர், ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்காக காலின் விளையாடி இருந்தாலும் இவரது பூர்வீகம் தென் ஆப்ரிக்கா என்று சொல்லப்படுகிறது.
2017ம் ஆண்டு கால கட்டத்தில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் இவர் தான் என்று சொல்லப்படும் அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்த காலின் கடந்த ஒரு வருடமாக மூளையில் உருவான கட்டியால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.
காலினின் மருத்துவ செலவிற்கு ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் உள்பட பலரும் உதவி செய்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்த வந்த காலின், நேற்று (18.4.19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காலினின் மறைவிற்கு முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.