இன்னும் எத்தனை நாள் தான் இப்படி எமாத்திட்டே இருப்பீங்க..? மீண்டும் சொதப்பிய முக்கிய வீரர்; கடுப்பான ரசிகர்கள் !!

இன்னும் எத்தனை நாள் தான் இப்படி எமாத்திட்டே இருப்பீங்க..? மீண்டும் சொதப்பிய முக்கிய வீரர்; கடுப்பான ரசிகர்கள்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் வெறும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்துள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் வங்கதேசத்தின் ஜஹூர் அஹமத் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் 22 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய விராட் கோலி வெறும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் போட்டியின் 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுல் இந்த போட்டியிலும் தனது பங்களிப்பை செய்து கொடுக்காமல் விக்கெட்டை விரைவாக இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்கள் மூலம் கே.எல் ராகுலை ரசிகர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் சில;

Mohamed:

This website uses cookies.