கரோனா சமயத்தில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணி: என்ன செய்யப்போகிறது ஐசிசி?

உலகமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து முடங்கியுள்ள நிலையில், தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளில் உள்ள விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள, அமெரிக்காவில் பேஸ்பால் நடைபெறவில்லை.

ஆனால் ஒரு குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தி லைவ் ஸ்ட்ரீம் மூலம் ஒளிபரப்பி அசத்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு வனாட்டு. இந்த தீவில் நான்கு அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ‘ப்ளூ புல்ஸ்’ அணி வெற்றி பெற்றது.

மேலும், ஆண்களுக்கான 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டியையும் நடத்தி அசத்தியுள்ளன. இந்த போட்டிகளை 3 லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகள் வனாட்டு தீவின் தலைநகரான போர்ட் விலாவில் நடைபெற்றன. அந்த நாட்டின் ஒளிபரப்பு நிறுவனமான விபிடிசி (VBTC) நான்கு கேமராக்கள் மூலம் போட்டியை முதன்முறையாக நேரடியாக ஒளிபரப்பியது. அத்துடன் வர்ணனையுடன் பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தது.

3 லட்சம் மக்கள் தொகை கொண்ட வனாட்டு தீவில் முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், இந்த ஆண்டு நடந்த பாகிஸ் தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) தொட ரின் போது சூதாட்டத்தரகர்கள் தன்னை அணுகியதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது இரண்டு பிரிவுகளில் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டை பதிவு செய்தது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தன் மீதான புகாரை எதிர்த்து அப்பீல் செய்யாத அவர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு காலம் தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான் நேற்று உத்தரவிட்டார். 29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 121 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் உள்பட 3194 ரன்கள் சேர்த்துள்ளார். 16 டெஸ்ட், 84 இருபது ஓவர் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.

Sathish Kumar:

This website uses cookies.