10இல்ல… 14 கோடி கொடுத்து கூட இந்த வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும்; முன்னாள் இந்திய வீரர் உறுதி
அடுத்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெரால்டை நிச்சயமாக ஏலத்தில் எடுக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் துவங்க இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
தனது அணியில் இருந்து 8 வீரர்களை விடுவித்துவிட்டு, கையிருப்பில் 31.4 கோடி வைத்திருக்கும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மினி ஏலத்தில் யார் யாரை எடுக்க போகிறது என்ற ஆவல் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது.
பந்துவீச்சில் சற்று பலம் குறைந்த அணியாக சென்னை அணி காணப்படுவதால், மினி ஏலத்தில் சென்னை அணி பந்துவீச்சாளர்களை ஏலத்தில் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெரால்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க கடுமையாக போராடும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய தேவை பந்துவீச்சாளர்கள் தான். என்னை பொறுத்தவரையில் தென் ஆப்ரிக்கா அணியின் இளம் பந்துவீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸியை சென்னை அணி ஏலத்தில் எடுக்க கடுமையாக முயற்சிக்கும். ஒரு முழுமையான பந்துவீச்சாளர் தான் சென்னை அணியின் தற்போதைய தேவையாகவும் உள்ளார். ஜெரால்ட் கோட்ஸியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தேவையை நிறைவேற்ற முடியும். அவரை சென்னை அணி அனைத்து சூழ்நிலைகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் சென்னை அணி அவரை 12- 14 கோடி ரூபாய் வரை கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும்” என்று தெரிவித்தார்.
ஜெரால்ட் கோட்ஸி தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் டி.20 தொடரில் ஜோகன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.