இதெல்லாம் நடக்கும்னு எனக்கு இரண்டு வருசத்துக்கு முன்னாடியே தெரியும்; ரோஹித் சர்மா ஓபன் டாக் !!

இதெல்லாம் நடக்கும்னு எனக்கு இரண்டு வருசத்துக்கு முன்னாடியே தெரியும்; ரோஹித் சர்மா ஓபன் டாக்

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக களமிறங்கும் நிலை தனக்கு வரும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டிண இந்திய வெற்றி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்கள் சதம் உட்பட தொடக்க வீரராக ரோஹித் சர்மா சிலபல சாதனைகளை நிகழ்த்தியுள்ளமை அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளுக்காவது அந்த இடத்துக்கு ஒரு நிரந்தரத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாததாகும்.

Rohit Sharma of India celebrates his Hundred during day 1 of the first test match between India and South Africa held at the ACA-VDCA Stadium, Visakhapatnam, India on the 2nd October 2019
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI

இந்நிலையில் ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா கூறியதாவது:

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி. கவனம் டெஸ்ட்டை வெல்வதில்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் தொடங்க வேண்டி வரலாம் என்று எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.

நான் டெஸ்ட் போட்டிகளில் ஆடாத காலங்களில் கூட வலைப்பயிற்சியில் நான் புதிய பந்துகளைத்தான் எதிர்கொண்டு ஆடினேன். வெள்ளைப்பந்தாயினும் சிகப்புப் பந்தாயினும் தொடங்கும் போது எச்சரிக்கையாக ஆட வேண்டும்.

பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் போது சூழ்நிலையைக் கொஞ்சம் கணித்து ஆட வேண்டும். இதுதான் என்னுடைய ஆட்டம் பற்றியதாகும். கொஞ்சம் எச்சரிக்கை கொஞ்சம் ஆக்ரோஷம் இதுதான் என் அணுகுமுறை.

முழு கவனமும் களத்தில் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்பதே.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

Mohamed:

This website uses cookies.