பிசிசிஐ நிர்வாகக் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று! நிர்வாகம் கவலை!

ஐபிஎல் தொடர் இந்த வருடத்தில் வெளி நாட்டில் நடந்தாலும் தொடர்ந்து இந்த தொடருக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. வீரர்கள் அனைவரையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனியாக தனி விமானத்தில் வைத்து துபாய்க்கு அனுப்பியது. 12 நாட்கள் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுக்கப்படும்.

இதில் அவர்களுக்கு வைரஸ் இல்லை என்ற முடிவு தெரிந்தால்தான், அனைவரும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் அனைத்து அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வரும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஹோட்டல் அறைக்குள் முடங்கி இருக்கிறார்கள். ஏன் எனில் அந்த அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் தற்போது ஐபிஎல் தொடர் நடப்பதில் சந்தேகமாய் உள்ளது. இதனை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென அணிக்குள் சிறிய பிரச்சினை காரணமாக வெளியேறி விட்டு இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆட போவதில்லை என்று அறிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பாகும் ஸ்டார் நிறுவனத்தின் டெக்னிகல் குழுவில் உள்ள முக்கியமான நிர்வாகி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியது .

இப்படி பிரச்சனையை மேல் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்க பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள மெடிகல் கமிஷன் அதிகாரி ஒருவருக்கு கொரோனா   வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் தொற்று போக்கை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மெடிக்கல் கமிஷனில் உள்ள ஒருவருக்கு கொரோனா  உருவாகியுள்ளது பிசிசிஐ நிர்வாகத்தை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இப்படி தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கு பிரச்சினைகளாக வந்துகொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் சௌரவ் கங்குலி என்ன செய்கிறார் என்று.

Mohamed:

This website uses cookies.