சிபிஎல் 2017: குடும்ப காரணமாக பாதியிலேயே வீடு திரும்பினார் மார்ட்டின் குப்தில்

நியூஸிலாந்து அணியின் தொடக்கவீரர் மார்ட்டின் குப்தில் குடும்பம் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பாதியிலேயே நாடு திரும்பினார்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மார்ட்டின் குப்தில் மீதம் உள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் தெரிகிறது. அவருக்கும் அவரது மனைவிக்கும் அடுத்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிறக்க போகும் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் வீடு திரும்புகிறார்.

6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் கயானா அணி 4வது இடத்தில் உள்ளது, மேலும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் மார்ட்டின் குப்தில் சிறப்பான பார்மில் இல்லை, 7 போட்டிகளில் விளையாடி 142 மட்டுமே எடுத்துள்ளார். இவருக்கு பதிலாக லுக் ராஞ்சி அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

“இந்த நேரத்தில் மார்ட்டின் குப்திலை இழப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால், அவருடைய குடும்பத்திற்காக அவர் செல்ல தான் வேண்டும்,” என அந்த அணியின் மேனேஜர் கூறினார்.

மேலும்,”எங்களுடைய கயானா குடும்பத்திற்கு லுக் ராஞ்சியை அழைக்கிறோம். அவருடைய அனுபவம் மற்றும் திறமை எங்களுக்கு உதவும்,” என கூறினார்.

கவுண்டி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய லுக் ராஞ்சி, 15 போட்டிகளில் 429 ரன் அடித்தார், அதில் மூன்று அரைசதங்கள் அடங்கும்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.