வேகபந்துவீச்சாளர் ஆண்டர்சன் மயிரிலையில் ஆபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இதற்கு சிரிப்புடன் பதிலும் அளித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களை முடித்துவிட்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நேற்று நடந்து முடிந்தது. இதில் விராத் கோயி தவிர மற்ற வீரர்கள் சரிவர செயல்படவில்லை.
இறுதிவரை போராடியும் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. முன்னணி பந்துவீச்சாளர்களான பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோருக்கு சரிவர சிறப்பாக அமையவில்லை எனினும் அறிமுக வீரரான சாம் கர்ரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் அபாரமாக பந்துவீசி அசத்தினர்.
தற்போது அடுத்த போட்டி துவங்க 5 நாட்கள் உள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்கள் பொழுது போக்கில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் ஞாயிறு அன்று பிராட் மற்றும் ஆண்டர்சன் இருவரும் கோல்ப் ஆட பக்கிங்காம்ஷிரில் உள்ள ஸ்டாக் கோல்ப் மைதானத்திற்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது தவறுதலாக ஷாட் அடித்த ஆண்டர்சன், பந்தை மரத்தின் மீது அடித்துள்ளார். பந்து மீண்டும் அவரின் முகத்தை நோக்கியே வந்துள்ளது. மறுபுறம் இதை படம்பிடித்துக் கொண்டிருந்த சக அணி வீரர் பிராட், ஒருநிமிடம் பந்து அவரை தாக்கிவிட்டது போலும் என அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின், இந்த விடியோவை சமூக வலைதளங்களில் சிரித்துக்கொண்டே பதிவேற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை ரீட்வீட் செய்த ஆண்டர்சன், நல்லவேளை எனது பல் உடையாமல் போனது, இருந்தாலும் நான் கோல்ப் ஆட்டத்தை விடப்போவதில்லை என தெரிவித்தார்.
தற்பொழுது இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி களிப்பில் உள்ளனர்.
இன்னொரு புறம், அடுத்த டெஸ்ட் போட்டியை சிறப்பாக ஆடி தொடரில் 1-1 என சமநிலை பெறவேண்டும் என்று கடினமாக பயிர்ச்சி செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்திய அணிக்கு பெருத்த அடியாக பும்ராஹ்விற்கு இன்னும் முழுமையாக குணமடையவில்லை என அவரது உடல்நல ஆலோசகர் தெரிவித்துள்ளார்.