இந்தியா ஆடாத இறுதிப்போட்டியின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா??? ரசிகர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுவும் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதால், அதைக் காண உள்நாட்டு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் இந்த ஆர்வத்தைப் பணமாக மாற்றுவதற்கு சிலர் முயன்று வருகின்றனர். ஐசிசியின் அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலம் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த முகமைகளும் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த முகமைகள் பிரீமியம் டிக்கெட்டுகளை 13.78 லட்சம் ரூபாய்க்கு விற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 11.76 லட்சத்துக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கிடையே, டிக்கெட் மறுவிற்பனையை பொறுத்தவரை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட மையம் மூலமே வாங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மைதானத்துக்குள் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது.

27 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிசுற்றை எட்டியதால் இங்கிலாந்து வீரர்கள் பரவசத்தில் உள்ளனர்.

பின்னர் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் ‘இன்றைய நாளில் எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. முழு அர்ப்பணிப்போடு விளையாடி வெற்றியை வசப்படுத்தி இருக்கிறோம். இது போன்று சாதிக்கும் போதும், சரியாக ஆடாத போதும் கூட ஒரு அணியாக நாங்கள் உற்சாகமாக அனுபவித்து கற்றுக்கொள்கிறோம். 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய போது அடுத்த உலக கோப்பையில் நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அந்த சமயம் 2019–ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து இறுதிசுற்றுக்கு வரும் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்லியிருந்தால் நான் உங்களை பார்த்து சிரித்து இருப்பேன். ஆனாலும் அதன் பிறகு வியக்கத்தகு முன்னேற்றம் கண்டு இந்த நிலையை எட்டியிருக்கிறோம்.

 

ஞாயிற்றுக்கிழமை நெருக்கடியை கண்டு பயந்து ஓடும் நாள் அல்ல. அது சாதிக்க வேண்டிய நாள். இங்கிலாந்து வீரர்கள் தங்களது வழக்கமான பாணியில் விளையாடி முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அது தான் முக்கியம்.

நியூசிலாந்து இந்த தொடர் முழுவதும் அனேகமாக தோற்கடிக்க கடினமான ஒரு அணியாக இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக ஆடினார்கள். இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. ஆனால் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.