துபாயை தொடர்ந்து சிங்கப்பூரிலும் கிரிக்கெட் அகாடமி தொடங்கினார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர்ந்துள்ளார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், டோனி வெளிநாட்டில் தொடங்கியுள்ளார்.

The academy will follow a structured curriculum developed by Dhoni, who won International Cricket Council (ICC) trophies in all formats of the game (2007 World T20, 2011 World Cup, 2013 ICC Champions trophy).

கடந்த நவம்பர் மாதம், துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கினார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டது.

படிப்படியாக இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள செயின்ட் பாட்ரிக் பள்ளியில் புதிய கிரிக்கெட் அகாடமியை டோனி தொடங்கியுள்ளார்.

It is important to provide facilities to the youngsters and at the end of the day, no one should say that they did not get to do something because they did not have the facilities.

இந்த பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் டோனி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி மையத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Editor:

This website uses cookies.