பாகிஸ்தான் வீரர் அஹ்மத் ஷேஷாத் போதைமருந்து பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதாக ரிசல்ட் வந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்தது.
26 வயதான ஷேஷாத் உள்ளூர் போட்டிகளில் ஆடுகையில் அவரது சிறுநீர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனையில் ஷேஷாத் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார் என ரிசல்ட் வந்தது. மேலும், அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை நடத்தப்பட்டது அதிலும் உறுதி ஆனது.
“ஷேஷாத் க்கு ஜூலை 17ம் தேதி வரை வேறு மாதிரிகளை கொடுத்து பரிசோதிக்க கெடு விதித்தது. மேலும், ஜூலை 27ம் தேதி வரை இந்த முடிவுக்கு பதிலளிக்குமாறும் கெடு விதிக்கப்பட்டது.” என பாகிஸ்தான் வாரியம் தனது இணையதளத்தில் தெரிவித்தது.
முடிவுகள் தெளிவாகும் வரை ஷேஷாத் எந்த போட்டியிலும் ஆடக்கூடாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
ஷேஷாத் கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக ஸ்காட்லாந்தில் இறந்து டி20 போட்டிகள் ஆடினார்.