ஒரு வீரருக்கு கொரோனா ! 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திடீரென ஒத்திவைப்பு ! ரசிகர்கள் கவலை !

ஒரு வீரருக்கு கொரோனா ! 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திடீரென ஒத்திவைப்பு ! ரசிகர்கள் கவலை !

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருவதை போல தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 4ஆம் தேதி துவங்கி இருந்தது. எப்போதும் போல் போட்டிக்கு தயாராகும் முன்னர் அனைத்து வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் கடைசிகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்படி வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் உடனடியாக இது குறித்து கூடி ஆலோசித்தனர்.

மூன்று போட்டிகளையும் எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று திட்டமிட்டு போட்டிகளை ஒத்தி வைத்திருக்கின்றனர். 4ஆம் தேதி நடக்க வேண்டிய முதல் ஒருநாள் தொடர் 6ம் தேதியும் 2வது போட்டி 7ஆம் தேதியும் 3-வது போட்டி 9ஆம் தேதியும் நடப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல்தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் கடுமையான விதிகளுக்கு இடையே உயிர் பாதுகாப்பு சூழலில் நடைபெற்று வருவதால் தற்போது வரை கொரோனா வைரஸ் போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மேலும் எங்கும் இல்லாத வகையில் ஆஸ்திரேலியாவிற்கு எந்த அணி சுற்றுப்பயணம் செய்தால் குறைந்தது 14 நாட்கள் உயிர் பாதுகாப்பு சூழலில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்தக் கடுமையான விதிகளால் தான் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் மிகச்சிறப்பாக வைரஸ் தொற்று இல்லாமல்  நடைபெற்று வருகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.