வீரேந்திர ஷேவாக்கை முடித்து வைத்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மைதானத்தில் ரசிப்பைதைவிட, அதன் பின்னணியில் வீரர்களுக்குள் ஏற்படும் போட்டிகள், சச்சரவுகள், வாக்குவாதங்களே ரசிகர்களுக்கு மிகுந்த எண்டர்டெய்ன்மென்ட்.
பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற குசலங்களிலும், புரளியிலும் சிக்குவது தோனிதான்.
தோனிக்கும், சேவாக்குக்கும் பிரச்னை, தோனிக்கும் காம்பீருக்கும் சண்டை, தோனியும் தினேஷ் கார்த்திக்கும் மோதல், தோனிக்கும் சச்சினுக்கும் சச்சரவு என்று புரளி பூதங்கள் டிசைன் டிசைனாக கிளம்பியதையடுத்து, தற்போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ஃபோகஸ் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுக்காமல் விட்டதும், பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதும் சரி, ஆரம்பித்தது குழப்பம்.
தோனிக்கும் அஸ்வினுகுமிடையே ஏற்பட்ட மோதலால் தான் அஸ்வின் சென்னை அணியில் விளையாடவில்லை என்றும், இருவருக்கும் போட்டி என்றும் பல வதந்திகள் கிளம்பி வந்தன.
தமிழ்நாடு பிரிமியர் லீக் சீசன் 3ல் பங்கேற்கும் திண்டுக்கல் டிராகன் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் அந்த அணியின் அணித்தலைவர் அஸ்வின் கலந்து கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:-
பிரீமியர் லீக் போட்டியில் இருந்து அடுத்தடுத்த போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் செல்கின்றனர். அதற்கு மிகப் பெரிய உதாரணம் நாரணய ஜெகதீஷ். இவர் பிரீமியர் போட்டிகளிலிருந்து அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாததற்கு ஒரு தமிழனாக வருந்துகிறேன். எனக்கும், டோனிக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, சகவீரர்களில் அவரும் ஒருவர். ஷேவாக்- டோனி இடையே பனிப்போர் என கூறி ஷேவாக்கை முடித்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தோனிக்கும் அஷ்வினும்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், “அதுபோல் எதுவும் இல்லை. சேவாக்குக்கும் தோனிக்கும் இடையே பனிப்போர் எனக்கூறி சேவாக்கை முடித்துவிட்டது போல் தன்னையும் முடித்துவிட வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.
மேலும், “அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுடனும் ஒரே நிலையில்தான் பழகி வருகிறேன். தோனியும் சக வீரர்களில் ஒருவர்தான். எனக்கும் தோனிக்கும் எந்த போட்டியும் இல்லை” என்று அஸ்வின் தெரிவித்தார்.