மற்ற விளையாட்டுத்துறையில் உள்ள வீரர்கள் தங்களது பயிற்சியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் கிரிக்கெட் வீரர்கள் கொடுப்பதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சேவாக். இவர் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘மற்ற விளையாட்டுத்துறையைச் சேர்ந்த வீரர்கள், அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று கிரிக்கெட் வீரர்கள் கொடுப்பதில்லை.
“ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவை கிரிக்கெட்டை விட பெரிய நிகழ்வுகள் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. இந்த தடகள வீரர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதாவது இவர்களுக்கு நல்ல உணவு, ஊட்டச்சத்து, பயிற்றுநர்கள், உடற்கோப்பு மருத்துவர்கள் ஆகியவை தேவை என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு.
கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடத் தொடங்கும்போது அவர்களுடைய பயிற்சியாளர்களை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பயிற்சியார்களுடன் அதிக அளவில் பேசுவதில்லை, சந்திப்பதில்லை. ஆனால், மற்ற போட்டிகளில் வீரர்களுக்கு தொடக்கத்தில் இருந்து இறுதி வரை பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பயிற்சியாளர்கள் அவருடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்’’
கிரிக்கெட் போட்டிகளை விடவும் ஒலிம்பிக்ஸ் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் மிகப்பெரியவை என்று நான் எப்போதும் நினைப்பேன். இந்தத் தடகள வீரர்களை நன்குக் கவனித்துக்கொள்வார்கள் என நினைத்தேன். அதாவது நல்ல, சத்தான உணவுகள், பயிற்சியாளர்கள், டிரெயினர்கள் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் அவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு, கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வசதிகளில் 10% அல்லது 20% கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை என உணர்ந்தேன். அப்படியிருந்தும் அவர்கள் பதக்கங்களை வெல்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காகப் பதக்கங்கள் வெல்வதால் தற்போது கிடைப்பதை விடவும் அதிக வசதிகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள்
என்றார்.