எங்க உயிர காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி; இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளது தென் ஆப்ரிக்கா !!

எங்க உயிர காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி; இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துள்ளது தென் ஆப்ரிக்கா

வீரர்களின் பாதுகாப்பிற்காக தொடரை ரத்து செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் 18-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் பெரும் நெருக்கடிக்கு இடையில் தொடரை ரத்து செய்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் ஃபால் கூறுகையில் ‘‘எங்களது வீரர்களை உடனடியாக சொந்த நாடு திரும்புவதற்கு அனுமதித்த பிசிசிஐ-க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த முடிவை எடுப்பது எளிதானது அல்ல. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டிருக்கும்.

BENONI, SOUTH AFRICA – DECEMBER 19: Dr. Jacques Faul CSA Acting CEO during the ICC U19 Cricket World Cup 2020 launch at Willowmoore Park on December 19, 2019 in Benoni, South Africa. (Photo by Christiaan Kotze – ICC/ICC via Getty Images)

கடினமான நேரத்தை அவர்கள் புரிந்து கொண்டதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் வீரர்கள் முதலில் சொந்த நாடு திரும்பியுள்ளனர்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.