சும்மா ஏன் அவன பத்தியே பேசிட்டு இருக்கீங்க; கடுப்பான தென் ஆப்ரிக்கா பயிற்சியாளர் !!

 சும்மா ஏன் அவன பத்தியே பேசிட்டு இருக்கீங்க; கடுப்பான தென் ஆப்ரிக்கா பயிற்சியாளர் 

நடப்பு உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் தோற்று அடுத்ததாக மே..தீவுகள் அணியுடன் மோதக் காத்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டிவில்லியர்ஸ் விவகாரம் பெரிய கவனச்சிதறலை ஏற்படுத்தி விட்டது என்று தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் .பி.டிவில்லியர்ஸ் பற்றிய கேள்வி அதிகம் எழுந்தவுடன் ஓட்டிஸ் கிப்சன் காட்டமாகிவிட்டார்.

நான் நினைக்கிறேன் டிவில்லியர்ஸைக் காட்டிலும் அவர் அணிக்கு வர வேண்டும் என்று இங்கு உள்ளவர்கள் பலரும் நினைக்கின்றனர் என்று. அவர் விரும்பியிருந்தால் அவர் இங்கு இருந்திருப்பார்.

நாம் இதைத்தான் நாள் முழுதும் பேசிக்கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது மே..தீவுகள் போட்டிக்குத் தயாராகப் போகிறோமா? இது ஏதோ நீதிமன்ற வழக்கு போலல்லவா இருக்கிறது.

ரிட்டையர் ஆன ஒருவரை அணியில் மீண்டும் தேர்வு செய்ததாக என் சமீப கால விளையாட்டு நினைவுகளில் இல்லை. யாரும் ஆடிப்போய்விடவில்லை, யாரும் இறந்து விடவில்லை. தென் ஆப்பிரிகாவில் நாங்கள் விளையாடிய போது 10 போட்டிகளி 8-ல் வென்றோம் அப்போது இந்தக் கேள்வியையெல்லாம் யாருமே கேட்கவில்லையே என்?

டிவில்லியர்ஸ் இடத்தில் எடுக்கப்பட்ட வீரர் தன் இடத்திற்கு தான் தகுதியானவர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாம்தான் பார்வைகளை மாற்ற வேண்டும்.பி.டிவில்லியர்ஸ் பற்றி நாம் விரும்பியதைப் பேசிக் கொண்டிருக்கலாம், ஆனால் அவரால் நமக்கு உதவ முடியாது. நமக்கு நாமே உதவிதான் சாத்தியம்.

இது எங்களை பாதிக்கப்போவதில்லை, ஆனால் நாங்கள் இன்னும் சரியாகவும் விளையாட ஆரம்பிக்கவில்லை.” என்றார் கிப்சன்.

Mohamed:

This website uses cookies.