கடந்த 10 வருடங்களில் இவர்கள் தான் கெத்து ! ஐசிசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று கடந்த 10 (2011 – 2020) வருடங்களுக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் சர்வதேச சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்துள்ளது.
ஐசிசி அறிவித்த ஒருநாள் மற்றும் டி20 கனவு அணியில் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து டெஸ்ட் போட்டியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு ஐசிசி தேர்வு செய்யப்பட்ட மூன்று வடிவிலான அணிகளில் இந்திய வீரர்கள் இருவர் கேப்டனாக செயல்படுவது சிறப்புமிக்கது.
இந்நிலையில், ஐசிசி தேர்வு செய்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இல்லாததால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஐசிசியை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை தலைசிறந்த வீரராக ஐசிசி தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஒருநாள் தொடரில் சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த கேப்டனான விராட் கோலியை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி 20 வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் துணை கேப்டனான ரஷீத் கானை தலை சிறந்த வீரராக ஐசிசி தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. 2011ல் நாட்டிங்காமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடுவரின் தவறால் இயன் பெல்க்கு விக்கெட் வழங்கப்பட்டது. ஆனால், தோனி அவரை மீண்டும் விளையாட அனுமதித்தார். இதன் காரணமாகவே இந்த விருது தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.