Use your ← → (arrow) keys to browse
குடும்பத்தை விட தனது அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடிய வீரர்கள்
எந்த ஒரு தொழிலையும் அர்பணிப்புணர்வுடன் செய்யும் பட்சத்தில் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம், இது கிரிக்கெட் விளையாட்டிற்கும் பொருந்தும் அல்லவா.
என்ன தான் கிரிக்கெட் விளையாட்டில் பணம் கொட்டினாலும், எந்த ஒரு விளையாட்டு வீரரனும் தனது சொந்த காரணங்களை விட தனது விளையாட்டிற்கும், தனது அணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடும் பட்சத்தில் தான் அவரால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது.
இப்படியாக தங்களது குடும்பத்தில் துக்க நிகழ்வுகள் (அ), வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற பொழுதிலும் தங்களது அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்காத 8 நட்சத்திர வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் ஒரு மிகச் சிறந்த லெக்-ஸ்பின்னர். இவர் ரன்களை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்தவர். இவருடைய ஆட்டம் பார்ப்பவரின் மனதை கவரும் வகையில் இருக்கும்.
ஜனவரி 2019 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் பிரான்சிஸ் அடிலைட் ஸ்ட்ரைக்கர் அணிக்காக விளையாண்டு கொண்டிருந்த நேரத்தில் தனது தந்தையின் மரணம் பற்றிய செய்தி ரசீதை தூக்கிவாரிப் போட்டது, அந்த இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இருந்தபோதும் அவரது உணர்வுகளை கட்டுப்படுத்தி தனது அணிக்காக விளையாடினார். இதனால் அவர் தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
ஆட்டம் முடிந்த பிறகு அவர் கூறிய வார்த்தை.”என்னால் எப்படி விளையாட முடிந்தது, அவர்கள் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார்கள்.
மேலும் அவர்கள் ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
நீ சோகமாக இருக்கிறாய், நீ வீட்டிலிருந்து மிகத்தொலைவில் இருக்கிறாய்,
நீ எங்களுக்காக விளையாட வேண்டும் , உனது தந்தைக்காக விளையாட வேண்டும்,” என்று என்னை ஊக்கப்படுத்தினார் இதுவே என்னை இந்த சோகமான நிலையிலும் விளையாட வைத்தது என்று கூறினார்.
Use your ← → (arrow) keys to browse