Use your ← → (arrow) keys to browse
வாழ்வில் ஒவ்வொருவரும் பல விஷயங்களில் சாதித்திருந்தாலும் ஒரு சில தவறவிட்ட விஷயங்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உறுத்திக்கொண்டே தான் இருக்கும். இது கிரிக்கெட் உலகிலும் பொருந்தும். மிக கடின உழைப்பிற்கு பிறகு எட்ட முடியவில்லை என்றால் வருத்தம் இருக்க தானே செய்யும். இப்படி தவறவிட்ட சாதனைகளை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
1. லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் தவறவிட்ட சதம்
கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் இதுவரை 100 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை சதம் அடித்ததே இல்லை, இது வருந்த கூடியதே.
லார்ட்ஸ் மைதானத்தில் 5 போட்டிகள் ஆடி அதிகபட்சமாக 40 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse