ஐசிசி மகளிருக்கான உலக கோப்பை 2017-இல் ,ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியை விளையாடினார்கள் , இதில் இந்திய அணி சார்பாக ஹார்மேன்ப்ரீட் கயூர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .ஹார்மேன்ப்ரீட் கயூர் அதிரடியாக விளையாடி 171 ரன்கள் குவித்தது இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய பங்காக அமைந்தது .இதை குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார் .
முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணிய வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்த நிலையில் , இரண்டாவது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மட்டும் இந்தியா மோதின .மழை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது . டாஸ் ஜெயித்த இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது .ஆனால் ,ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ம்ரிதி முதல் ஓவர் -லய சொர்ப ரன்னில் அவுட் ஆகி வெளி ஏறினார் . அதை தொடர்ந்து பூனம் றூட் -இம் 14 ரன்கள் முட்டுமே எடுத்து அவுட் ஆகினார் . கேப்டன் மித்தாலி ராஜ் பொறுமையாக விளையாடி 36 ரன் -இல் அவுட் ஆனார் . நான்காவது விக்கெட் -காக தீப்தி சர்மா மற்றும் ஹார்மேன்ப்ரீட் கயூர் இணைந்து ஆடினர் . தீப்தி சர்மா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார் .
இந்திய அணி 25 ஓவர்களில் 101-3 என்ற கணக்கில் தள்ளாடியது .ஹார்மேன்ப்ரீட் கயூர் தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர் . அவருடைய ஆட்டம் ஆஸ்திரேலியா பௌலர்களுக்கு பெருத்த அடியாக அமைந்தது .64 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ஹார்மேன்ப்ரீட் கயூர் வெறும் 115 பந்துகளில் 171 ரன்களை 20 பௌண்டரிகள் மற்றும் 6 சிஸேர்கள் உதவியுடன் விளாசினார் . அவருடைய சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி மிக சிறப்பான இலக்கை அடைந்தது ! 42 ஓவர்களில் இந்தியா 282 ரன் -ஐ ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக அமைத்தது .
ஹார்மேன்ப்ரீட் கயூர் -இன் சிறப்பான ஆட்டத்தை முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார் .
” ஹார்மேன்ப்ரீட் கயூர் மிகவும் அற்புதமாக விளையாடி உள்ளார் , இரண்டாவது பகுதியிலும் சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெறுங்கள் ” என தனது வாழ்த்து செய்தியை தெரிவித்து இருந்தார் .
இரண்டாவது இன்னிங்ஸ்-இல் ஆஸ்திரேலியா அணி தொடக்க விக்கெட்டுகளை மிக சுலபமாக இழந்தது . அலெஸ் ப்ளாக்க்வெல் மற்றும் எல்லிஸ் விளானி மட்டும் அணிக்காக போராடினார்கள் .அலெஸ் ப்ளாக்க்வெல் 90 ரன் மற்றும் எல்லிஸ் விளானி 75 ரன் இல் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலியா அணியின் தோல்வியை உறுதி செய்தது . 245 ரன் -இல் அனைத்து விக்கெட்களையும் இழந்தது . இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா -வை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது . இந்திய அணி சார்பாக
கோஸ்வாமி & ஷிகா பாண்டே தலா இரண்டு விக்கெட்களும் ,தீப்தி சர்மா மூன்று விக்கெட்களையும் எடுத்தனர் . இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் எதிரான இறுதி போட்டி வரும் ஜூன் 23-இம் தேதி நடைபெறுகிறது.