உலகின் மிகச்சிறந்த 2 டி20 அணிகள் இவைதான்: ஆய்வில் தகவல்

அதிக ரசிகர்கள் கொண்ட அணி தேர்வு! ஆனால், அது மும்பை இந்தியன்ஸ் அணி இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று வெற்றி வாகை சூடிவிட்டது. இது அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பையாகும் பெரும்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் 8 அணிகள் இருக்கையில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் தான் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.

மும்பை அணி 5 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை வென்று இருக்கிறது. கோப்பை மட்டுமல்ல ரசிகர்களின் மனதையும் இந்த இரு அணிகள் தான் அதிகமாக வென்றிருக்கின்றன. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை வைத்து எந்த அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர் என்று கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்தியாவின் 23 மாநிலங்களில் உள்ள 3600 நகரவாசிகளிடம் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது .

இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. மொத்தம் அந்த அணிக்கு மட்டும் 26.8 மில்லியன் அதாவது 2.6 கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. இது நகர வழியில் மட்டும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

மொத்தம் 8.6 கோடி ரசிகர்களில் 2.6 கோடி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 2.4 கோடி ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 1.3 கோடி ரசிகர்கள் பெங்களூரு அணிக்கு ஓட்டளித்து இருக்கின்றனர். இந்த மூன்று அணிகள் மட்டும் 75 சதவீத ரசிகர்கள் பட்டாளத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.