டூவைன் பிராவோ இன்று விளையாடுவாரா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை அணி !!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த டூவைன் பிராவோ அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6 போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி ஒவ்வொரு போட்டியிலும் மோசமாக விளையாடி வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கைக்கு எட்டிய வாய்ப்பை வீணடிக்கும் வகையில் மோசமான பீல்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியடைந்தது. அதே போல் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை விச வேண்டிய பிராவோவும் பந்துவீச முடியாமல் காயமடைந்ததும் சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

பிராவோ இருந்திருந்தால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அசால்டாக வெற்றி பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக டூவைன் பிராவோ அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது ஸ்டீபன் பிளங்கிங் கூறிய அதே கருத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை அணியின் சி.இ.ஒ காசி விஸ்வநாதன் கூறுகையில், பிராவோவிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்தான ரிப்போர்ட் கிடைத்துவிட்டது, அவரால் இரண்டு போட்டிகள் அல்லது இரண்டு வாரங்கள் விளையாட முடியாது. பிராவோவிற்கு பதிலான மாற்று வீரரை அணியில் சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை, ஒரு வீரரை புதிதாக எடுத்தால் அது சரியாகவும் இருக்காது. கொரோனா காரணமாக அவரது தனிமைப்படுத்தப்படும் நாட்கள் முடிவதற்குள் ஐபிஎல் தொடரே முடிந்துவிடும். அதே போல் டூவைன் பிராவோவும் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகவில்லை, அவருக்கு ஏற்பட்டுள்ள காயமும் அவ்வளவு தீவிரமானதாக இல்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.