குஜராத் மட்டும் இல்ல… சென்னைக்கும் அடி உறுதி.. இது சென்னை வீரர்களுக்கும் தெரியும்; கிரிஸ் கெய்ல் சொல்கிறார்
நாக் அவுட் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது சுலபம் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 16வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கியது. மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் ப்ளே சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் சென்னை – குஜராத் இடையேயான முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
இந்தநிலையில், இறுதி போட்டிக்கான இரண்டாவது டீமை தேர்வு செய்யும் குஜராத் – மும்பை இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டி அஹமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்தநிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரிஸ் கெய்ல், மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் சுற்றில் வீழ்த்து சுலபமான விசயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிரிஸ் கெய்ல் பேசுகையில், “நாக் அவுட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்து எளிதான காரியம் கிடையாது. லீக் போட்டிகளில் எவ்வளவு மோசமாக விளையாடினாலும், ப்ளே ஆஃப் சுற்று என வந்துவிட்டால் மும்பை இந்தியன்ஸ் அணி மிகுந்த ஆபத்தான அணி. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தெரியும். மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வருவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விரும்பாது என்றே கருதுகிறேன். தொடர்ச்சியாக வெற்றிகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது குஜராத் அணிக்கும், சென்னை அணிக்கும் பெரிய சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.