நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச தேர்வு செய்துள்ளது,
எப்போது: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 15, 8:00 PM IST
எங்கே: பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் : லோகேஷ் ராகுல் , மயான்க் அகர்வால், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), ஆண்ட்ரூ டை, மோஹித் சர்மா, முஜீப் உர் ஏ. ஆர். ரகுமான், கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லர், பரேந்தர் ஸ்ரான்,
சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ். டோனி, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்,பாஃப் டூ பிளெசிஸ், முரளி விஜய்
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நடப்பு ஐபில் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால் நா
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி விளையாடியுள்ளது. முதல்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அணியின் வெற்றியை பிராவோ உறுதி செய்தார்.இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றுள்ளதால் அந்த அணி வீரர்கள் மிகவும் உற்சாகத்துடன் களமிறங்க இருக்கின்றனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளன. முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அனியிடம் தோல்வியைத் தழுவியது. நாளைய நடக்கவிருக்கும் போட்டியில் அதிக உத்வேகத்துடன் களமிறங்க பஞ்சாப் அணி காத்துக் கொண்டிருக்கிறது. எனவே நாளைய போட்டி ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடக்க இருக்கிறது.