இனி சிஎஸ்கேவுக்கு பவுலிங் பிரச்சனையே இருக்காது ; பலம் சேர்க்கும் வீரர் இணைப்பு !
14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி அணியும், மூன்றாவது இடத்தில் மும்பை அணியும் இருக்கிறது.
இந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் அணி கோப்பை வென்றே ஆக வேண்டும் என்று தீர்மானமாக உள்ளது. ஏன்னென்றால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே ஆஃபுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கு காரணம் சிஎஸ்கேவில் உள்ள முக்கிய வீரர்கள் பலர் மோசமாக விளையாடினார்கள். இதையடுத்து சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாததும் ஒரு காரணம்.
இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. இந்த இரு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் தென்னாப்பிரிக்கா வீரர் லுங்கி நெகிடி தற்போது தனது குவரான்டைனை முடித்து விட்டு அணியுடன் இணைந்திருக்கிறார்.
இவர் கட்டாயமாக இருக்க வேண்டிய குவாரன்டைனை முடித்து தற்போது தீவிராமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக அணி நிர்வாகம் கூறியுள்ளது. இவர் ஐபிஎல்லில் 2018ம் ஆண்டு சென்னை அணிக்காக அறிமுகமாகினார். அந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதையடுத்து, கடந்த (2020) சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இரண்டு போட்டிகளில் இவரை சிஎஸ்கே அணி மிஸ் செய்தது. எனவே, தற்போது இவர் மீண்டும் அணியில் இணைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.