நியூசிலாந்து அணியில் சென்னை வீரர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டெஸ்ட் அணி அறிவிப்பு !
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்த இரு அணிகளுக்கும் இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 22ஆம் தேதி 3-வது டி20 போட்டி நடைபெற்று முடிக்கப்படும். இது முடிந்த பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த இரண்டு அணியிலும் விளையாடும். இதற்காக தற்போது டெஸ்ட் அணியை அறிவித்து இருக்கிறது நியூசிலாந்து அணி. பொதுவாக நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது சொந்த மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே பெரிதாக விளையாடும்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மிட்செல் சான்ட்னர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஜாஸ் அகமது ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மிட்செல் சான்ட்னர் கடந்த மூன்று வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது மற்றும் சுழற்பந்து வீச்சாளரான இஜாஸ் அகமது அதில் கடந்த சில வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவ்வப்போது நியூசிலாந்து தேசிய அணியிலும் இடம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இவர் இடம் பிடித்திருப்பது அவரது சொந்த கிராமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த இரண்டு வீரர்களும் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமல்லாது 7 மற்றும் 8வது இடங்களில் பேட்ஸ்மேனாக செயல்படுவதற்கும் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாம் பிளண்டெல், 3. டிரென்ட் போல்ட், 4. கைல் ஜேமிசன், 5. டாம் லாதம், 6. டேரில் மிட்செல், 7. ஹென்றி நிக்கோல்ஸ், 8. மிட்செல் சான்ட்னர், 9. டிம் சவுத்தி, 10. ராஸ் டெய்லர், 11. நீல் வாக்னர், 12. வாட்லிங் (விக்கெட் கீப்பர்), 13. வில் யங்.