என மனதை மாற்றியது இவர்கள்தான்: அம்பட்டி ராயுடு ஓப்பன் டாக்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த அவர், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

In a letter addressed late on Thursday evening, Ambati Rayudu said that he would like to come out of retirement and play in all formats. He also thanked one and all who stood by him in difficult times.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான போட்டியில் விளையாட சென்னை வந்த அவர், தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டதாகக் கூறினார். ’அது ஏமாற்றத்தால் எடுத்த முடிவு. இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன். இதுபற்றி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அதோடு ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

The 33-year-old Ambati Rayudu also said the decision to retire was taken in haste and an emotional one. He also revealed that he will be available for selection from September 10 and is looking forward to it.

இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அவர் அனுப்பியுள்ள மெயிலில், ’ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெறுகிறேன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலும் ஆட தயாராக இருக்கிறேன். செப்டம்பர் 10 ஆம் தேதி முதல், ஐதராபாத் அணியில் இணைய ரெடியாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, கடினமான நேரத்தில் தனது மனதை மாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

India’s Ambati Rayudu plays a shot during the second one-day international cricket match between India and West Indies in Visakhapatnam, India, Wednesday, Oct. 24, 2018. (AP Photo/Aijaz Rahi)

’’எனக்கு ஆதரவாக இருந்த, என்னை மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பமாறு உணர்த்திய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண், நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.