உங்க படம் இந்த டீம் கிட்ட ஓடாது… சாம்பியன் பட்டம் இந்த அணிக்கு தான்; காரணத்துடன் விளக்கிய முன்னாள் வீரர் !!

உங்க படம் இந்த டீம் கிட்ட ஓடாது… சாம்பியன் பட்டம் இந்த அணிக்கு தான்; காரணத்துடன் விளக்கிய முன்னாள் வீரர் !!

சென்னை – குஜராத் இடையேயான இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் அக்ரம் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும், இறுதி போட்டி 29ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது. 28ம் தேதி நடைபெற வேண்டிய போட்டியானது மழை காரணமாக 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இறுதி போட்டி குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருவதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம், இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், “சென்னை அணியும், குஜராத் அணியும் முதல் 4 இடங்களில் நிச்சயம் இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன், இரண்டு அணிகளும் தற்போது இறுதி போட்டிக்கே தகுதி பெற்றுவிட்டன. என்னை பொறுத்தவரையில் சென்னை அணி கோப்பையை வெல்ல 60 சதவீத வாய்ப்புகள் உள்ளது. குஜராத் அணிக்கு 40 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது. இரு அணியுமே சமபலம் பெற்றிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வலுவான அணி. விரைவாக சில விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், போட்டி எப்படி தங்களது கட்டுக்குள் கொண்டவர வேண்டும் என்பது சென்னை வீரர்களுக்கு தெரியும். குஜராத் அணி சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரை மட்டுமே முழுமையாக சார்ந்துள்ளது. சென்னை அணி அப்படி இல்லை, அனுபவம் வாய்ந்த பலர் இருப்பது சென்னை அணியின் கூடுதல் பலம்” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.