3 வருடத்திற்கு பிறகு சேப்பாக்காம் வந்த சிஎஸ்கே !! போராட்ட பூமியான அண்ணா சாலை!! பெருமூச்சு விடும் ரசிகர்கள்!! ட்விட்டர் கருத்துக்கள்!

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்கள் போல் வந்திருந்த போராட்டக்காரர்கள் காலணியை வீசினர். சென்னை அணிக்கு 203 ரன்கள் டார்கெட்!

ஐபில் போட்டிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி எவ்வித சிக்கலுமின்றி தொடங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. ஐபிஎல் நிர்வாகம் அம்பயரை அழைத்து வர மறந்ததால் டாஸ் போடுவதில் 13 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. காவிரி பிரச்னைக்காக ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் அந்தக் கோரிக்கைகளை ரசிகர்கள் ஏற்றதாக தெரியவில்லை. மைதானத்தில் பெருமளவு கூட்டம் காணப்பட்டது. காலியான சேர்கள் அவ்வளவாக காணப்படவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை பார்த்து வருகின்றனர்.

முன்னதாக, அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஎஸ்கே ஆடையும் எரிக்கப்பட்டது. போராட்டத்தின் போது போலீசார் லேசான தடியடியும் நடத்தினர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் சிஎஸ்கே டிசர்ட் அணிந்து இருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதும் மற்றவர்கள் மெல்ல மெல்ல கலைந்து சென்றனர். சுமார் 7 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது. போக்குவரத்து சீரடைந்ததை அடுத்து மைதானத்திற்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்தும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். இதையடுத்து பலத்து பாதுகாப்புடனும், தீவிர சோதனைக்கு பிறகும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மைதானத்திற்குள் ரசிகர்கள் போல் வந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்கள் காலணி மற்றும் மேலாடையை கழட்டி வீசினர். இதனால் 2 நிமிடம் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Editor:

This website uses cookies.