“முதல் அணியாக பிளே-ஆப் செல்லுமா சிஎஸ்கே?”.. இன்று சிஎஸ்கே முதலில் பேட்டிங்… அணியில் முக்கிய மாற்றதுடன் களமிறங்குகிறது! – பிளேயிங் லெவன் உள்ளே!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் இறங்குகிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்னும் விவரங்களை கீழே காண்போம்.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் இறங்குவதாக அறிவித்தார்.

அணியில் ஏதேனும் மாற்றங்கள்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று ஒரு மாற்றத்துடன் இறங்குகிறது. சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் வெளியில் அமர்த்தப்பட்டு வைபவ் அரோரா பிளேயிங் லெவனுக்குள் வந்திருக்கிறார். சிஎஸ்கே அணி வழக்கம்போல, பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இறங்குகிறது.

புள்ளிப்பட்டியல் நிலவரம்

சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக காலடி எடுத்து வைக்கும். மேலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை பெறும். பிளே-ஆப் சுற்றுக்கு தேதிபெற மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.  இன்றைய போட்டியில் தோல்வியை தழுவினால், தொடரை விட்டு வெளியேறுவது 100% உறுதியாகிவிடும் என்கிற நிலையிலும் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)

ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்)

ரஹ்மானுல்லா குர்பாஸ்(கீப்பர்), ஜேசன் ராய், நிதிஷ் ராணா(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி.

Mohamed:

This website uses cookies.