சேப்பாக்கம் ஸ்டேடியத்தை அதிரவைத்த ருத்துராஜ்-கான்வெ ஜோடி… பவர்-பிளே ஓவரில் பறந்த பவுண்டரி சிக்ஸர்கள்.. சிஎஸ்கே அணிக்கு புதிய ரெக்கார்ட்!

சேப்பாக்கம் ஸ்டேடியத்தை அதிரவைத்த ருத்துராஜ்-கான்வெ ஜோடி… பவர்-பிளே ஓவரில் பறந்த பவுண்டரி சிக்ஸர்கள்.. சிஎஸ்கே அணிக்கு புதிய ரெக்கார்ட்!

டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி பவர்-பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்து, சேப்பாக்கம் மைதானத்தில் புதிய ரெக்கார்ட் படைத்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2023 ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ இரு அணிகளும் மோதுகின்றன.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தை அதிரவைத்த ருத்துராஜ்-கான்வெ ஜோடி... பவர்-பிளே ஓவரில் பறந்த பவுண்டரி சிக்ஸர்கள்.. சிஎஸ்கே அணிக்கு புதிய ரெக்கார்ட்! 1சேப்பாக்கம் ஸ்டேடியத்தை அதிரவைத்த ருத்துராஜ்-கான்வெ ஜோடி... பவர்-பிளே ஓவரில் பறந்த பவுண்டரி சிக்ஸர்கள்.. சிஎஸ்கே அணிக்கு புதிய ரெக்கார்ட்! 1

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரர்களாக டெவான் கான்வெ மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் களம் இறங்கினர்.

ருத்துராஜ்-கான்வெ ஜோடி பவர்-பிளே ஓவர்களில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக தெறிக்கவிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அதிரவைத்தது. முதல் ஓவரில் 6 ரன்கள், இரண்டாவது ஓவரில் 17 ரன்கள், மூன்றாவது ஓவரில் 10 ரன்கள், நான்காவது ஓவரில் 7 ரன்கள், ஐந்தாவது ஓவரில் 20 ரன்கள், ஆறாவது ஓவரில் 19 ரன்கள் என பவர்-பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பவர்-பிளே ஓவர்களில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனை முறியடித்து புதிய ரெக்கார்டட் படைத்திருக்கிறது கான்வெ-ருத்துராஜ் ஜோடி.

ஐபிஎல் வரலாற்றில் பவர்-பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணி அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோர்:

1. 100/2 – பஞ்சாப் அணிக்கு எதிராக – 2014 – மும்பையில்

2. 90/0 – மும்பை அணிக்கு எதிராக – 2015 – மும்பையில்

3. 79/0 – லக்னோ அணிக்கு எதிராக – இன்று – சென்னையில்*

4. 75/1 – கொல்கத்தா அணிக்கு எதிராக – சென்னையில்

9.1 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட்10 ரன்கள் குவித்துள்ளது சிஎஸ்கே அணி. அரைசதம் அடித்த ருத்துராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். கான்வெ 25 பந்துகளில் 45 ரன்கள் விளையாடி வருகிறார். முதல் விக்கெட்டுக்கு கான்வெ-ருத்துராஜ் ஜோடி 110 ரன்கள் சேர்த்தது.

 

Mohamed:
whatsapp
line