சிஎஸ்கேன்னா ஃபயருடா… முரளி விஜய்-மைக் ஹஸ்ஸி வைத்திருந்த பல வருட ரெக்கார்ட் காலி செய்து…. புதிய வரலாறு படைத்த டெவான் கான்வெ-ருத்துராஜ் ஜோடி..!

ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் சிஎஸ்கே அணிக்கு முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸி ஜோடி வைத்திருந்த பல வருட சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது டெவான் கான்வெ – ருத்துராஜ் கெய்க்வாட் ஜோடி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ இரு அணிகளும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று பவுலிங் எடுத்தது லக்னோ அணி.

 

இதனையடுத்து சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரர்களாக டெவான் கான்வெ மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ருத்துராஜ்-கான்வெ ஜோடி ஆரம்பம் முதலே ஓவர்களில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக தெறிக்கவிட்டு பவர்-பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு பவர்-பிளே ஓவர்களில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனை முறியடித்து புதிய ரெக்கார்டட் படைத்திருக்கிறது கான்வெ-ருத்துராஜ் ஜோடி.

 

ருத்துராஜ்-கான்வெ ஜோடி அத்துடன் நிற்கவில்லை. 8 ஓவர்களில் 101 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணிக்கு மற்றுமொரு வரலாறு படைத்திருக்கிறது. முதல் விக்கெட்டுக்கு கான்வெ-ருத்துராஜ் ஜோடி 110 ரன்கள் சேர்த்தது.

ஐபிஎல் வரலாற்றில், சிஎஸ்கே அணிக்கு அதிக 100+ ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள்

1. கான்வெ – ருத்துராஜ் – 3 முறை*

2. முரளி விஜய் – மைக் ஹஸ்ஸி – 2 முறை

3. பிரெண்டன் மெக்கல்லம் – டிவைன் ஸ்மித் – 2 முறை

4. டு ப்ளெசிஸ் – ஷேன் வாட்சன் – 2 முறை

5. டு ப்ளெசிஸ் – ருத்துராஜ் – 2 முறை

சென்னை-லக்னோ போட்டி..

10ஆவது ஓவரின் முதல் பந்தில், ருத்துராஜ் கெய்க்வாட் (31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து) அவுட்டானார். கான்வெ 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த சிவம் துபெ 27 ரன்கள், மொயின் அலி 19 ரன்கள் அடித்து அவுட்டாகினர்.

Mohamed:

This website uses cookies.