இளம் வீரர் அதிரடி நீக்கம்; சிவம் துபேவிற்கு இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருடத்திற்கான தொடரை மிக மோசமாக துவங்கியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் வெறும் 131 ரன்கள் மட்டும் எடுத்ததால் தோல்வியடைந்த சென்னை அணி, லக்னோ அணிக்கு எதிரான தனது அடுத்த போட்டியில் 210 ரன்கள் குவித்தும் அந்த போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று (03-4-22) நடைபெறும் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளதால், இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்க வீரர்களாக கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் ராபின் உத்தப்பா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரே களமிறங்குவார்கள் என தெரிகிறது. ருத்துராஜ் கெய்க்வாட் இந்த போட்டியிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

அதே போல் மிடில் ஆர்டரிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, தோனி மற்றும் சிவம் துபே ஆகியோரே களமிறங்குவார்கள். சிவம் துபே கடந்த போட்டியில் மிக மோசமாக பந்துவீசியிருந்தாலும் அவருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

ஆல் ரவுண்டர்களாக வழக்கம் போல் ஜடேஜா மற்றும் பிராவோவே களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட டூவைன் ப்ரெடோரியஸுடன், துசார் தேஸ்பாண்டே மற்றும் ராஜவர்தன் ஹங்ரேக்கர் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முகேஷ் சவுத்ரிக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கிய சென்னை அணி, இந்த முறை நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்க நினைத்தால் முகேஷ் சவுத்ரியின் இடத்தில் இலங்கை அணியின் தீகஷ்சன்னாவிற்கு கூட களமிறக்கப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, தோனி (விக்கெட் கீப்பர்), ஜடேஜா (கேப்டன்), சிவம் துபே, டூவைன் பிராவோ, டூவைன் ப்ரெட்டோரியஸ், துசார் தேஸ்பாண்டே, முகேஷ் சவுத்ரி/ஹங்ரேக்கர் / தீக்சன்னா.

Mohamed:

This website uses cookies.