அடடா… டெத் ஓவரில் சொதப்பல்… கடைசி பந்தில் போட்டியை நழுவவிட்ட சிஎஸ்கே… பஞ்சாப் த்ரில் வெற்றி!

கடைசி ஓவர் கடைசி பந்துவரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டெவான் கான்வே 52 பந்துகளில் 92 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். கடைசியில் வந்த தோனி அடுத்தடுத்து இரண்டு சித்தர்கள் அடித்து, நான்கு பந்துகளில் 13 ரன்கள் அடித்திருந்தார்.

இந்த இலக்கை துரத்திய பஞ்சாப் கின்னஸ் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. பிரப்சிமரன் 42 ரன்களும், சிக்கிர்தவான் 28 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர்.

மிடில் ஆர்டரில் லியம் லிவிங்ஸ்டன் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை கொண்டு வந்தார்.

பின்னர் ஷாம் கர்ரன் 20 பந்துகளில் 29 ரன்கள் மற்றும் ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் 21 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கூடுதல் நம்பிக்கை வந்தது.

கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இருந்தபோது ஜித்தேஷ் சர்மா பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்து ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராசா கடைசியில் வந்து 7 பந்துகளில் 13 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.

குறிப்பாக கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, கட்டுக்கோப்பாக பந்துவீசி வந்த பத்திரனா, 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். கடைசி பந்தில் ஒரு தவறான பால் வீசியதால், அதைப் பயன்படுத்திக் கொண்ட சிக்கந்தர் ராசா பந்தை ஆளில்லாத திசையில் அடித்து மூன்று ரன்களை ஓடி எடுத்தார்.

ஒரு கட்டத்தில் கையில் இருந்த போட்டியை கடைசி 5 ஓவர்களில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து கோட்டை விட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒருமுறை டெத் ஓவர்கள் பிரச்சனையாக இருப்பது தெளிவாகியுள்ளது.

கடைசி ஓவர் கடைசி பந்தில் 201 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Mohamed:

This website uses cookies.