சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு இந்த இரண்டு விசயங்கள் தான் காரணம்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருட தொடரின் துவக்கமே மிக மோசமாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலுமே படுதோல்வியையே சந்தித்துள்ளது.

மூன்று தொடர் தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று (9-4-22) நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், முன்னாள் வீரர்கள் பலர் சென்னை அணிக்கான தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். அதே போல் சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் சென்னை வீரரான ஹர்பஜன் சிங், சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்தான தனது பார்வையை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன். முதலில் தீபக் சாஹருக்கு பதிலான சரியான மாற்று வீரர் சென்னை அணிக்கு தற்போது வரை கிடைக்கவில்லை. தீபக் சாஹரை போன்று புதிய பந்தில், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுத்து கொடுக்கும் ஒரு பந்துவீச்சாளர் இருந்திருந்தால் கூட சென்னை அணிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதே போல் சரியான சுழற்பந்து வீச்சாளர்களும் சென்னை அணியில் இல்லை. இரண்டாவதாக, ருத்துராஜ் கெய்க்வாட்டின் மோசமான ஆட்டம் சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்து வருகிறது. ருதுராஜ் சொதப்புவதால் சென்னை அணிக்கு சரியான துவக்கம் கிடைப்பது இல்லை. இதுவே சென்னை அணியின் தோல்விக்கான காரணமாக நான் பார்க்கிறேன், அதே போல் இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் அதிலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.