இனி சத்தமே வர கூடாது… மொத்தமாக திருப்பி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்
ஹைதராபாத் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபார வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
லக்னோ அணிக்கு எதிரான அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஹைதராபாத்திற்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ரன்களும், டேரியல் மிட்செல் 52 ரன்களும் எடுத்தனர்.
பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் இந்த போட்டியில் மிக மிக சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிளாசன், ஹெட், மார்கரம் உள்ளிட்ட ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் அசால்டாக கைப்பற்றி, ஹைதராபாத் அணியை 134 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் நல்ல ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறியது. பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
இந்தநிலையில், கடந்த இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை அணி, பேட்டிங்கில் வலுவான அணியாக திகழ்ந்த ஹைதராபாத்தை ஆல் அவுட்டாகி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான கெய்க்வாட், சிவம் துபே, துசார் தேஸ்பாண்டே உள்ளிட்ட வீரர்களையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதில் சில;